User Overview

Followers and Following

Followers
Following
Trendsmap

History

Total Followers - Last Year
Daily Follower Change - Last Year
Daily Tweets - Last Year

Tweet Stats

Analysed 939 tweets, tweets from the last 232 weeks.
Tweets Day of Week (+0:00h)
Tweets Hour of Day (+0:00h)
Key:
Tweets
Retweets
Quotes
Replies
Tweets Day and Hour Heatmap (+0:00h)

Tweets

Last 50 tweets from @ikamalhaasan
Guru #EnnioMorricone. Sire we shall never miss you! You’ve given enough music to listen, live with, improvise and go beyond. Thank you & Salutes! He’ll never be called late Mr.Morricone. He will always be on time.
 
His wisdom will not die and should not. History might repeat itself in ignorance. Wisdom will and should and yet improve. Hence many more happy returns @DalaiLama
 
naametheervu.org
நாமே தீர்வு இயக்கத்தின் அடுத்த கட்டம். உதவ நினைப்போரையும், உதவி வேண்டுவோரையும் இணைத்திடும் முயற்சி. இந்த இணையதளத்தை இன்று அறிமுகப்படுத்திய @gvprakash அவர்களுக்கு என் நன்றிகள். இளைஞர்கள் இணைந்தால் தான் தீர்வுகள் விரைவாகும்.
இணைந்து மீட்போம் சென்னையை.
Happy to launch the website of #NaameTheervu a unique plan to help people, help each other. Our city needs more helping hands and support right now. Join hands in this and Let’s make chennai green and safe again. @ikamalhaasan @maiamofficial

naametheervu.org pic.twitter.com/GFTGEl0dkC
 
சாமானியனை மரியாதையின்றி பேசுவது, தாக்குவது, பொய்வழக்கு போடுவது என காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது?
சட்டரீதியாக இந்தப் போரை மக்கள் நீதி மய்யம் இன்று நீதி மன்றத்தில் தொடங்குகிறது. இத்தனை காலம் இதைச் செய்யாத ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது.
 
கடந்த 3 மாதங்களில் இரண்டாவது விபத்தை சந்தித்திருக்கிறது நெய்வேலி அனல்மின் நிலையம்.

விபத்துக்களில் உயிர் பலிகளும், சேதாரமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. லாபத்தையும், வளர்ச்சியையும் விட மனித உயிர்கள் முக்கியம்.

இதை உறுதி செய்யாத அரசுகள் அகற்றப்பட வேண்டும்.
 
பரவிடும் தொற்று நமை பயமுறுத்தும் போது, குணமடைந்தோர் பட்டியல்
தாம் நம் நம்பிக்கையின் ஊற்று.
அந்த பட்டியலை நீள்விக்க,
என் குடும்பம், என் பாதுகாப்பு என பாராமல், மக்கள் சேவையே முக்கியம் எனக் கருதும் மருத்துவர்களுக்கு நம் நன்றிகளும், மருத்துவர் தின வாழ்த்துக்களும்.
 
சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் நீதியை நிலைநாட்ட போராடிக் கொண்டிருக்கும் மேஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கும், அவருக்கு உறுதுணையாக நிற்கும் மதுரை உயர்நீதி மன்றத்திற்கும், மனசாட்சியோடு சாட்சி சொன்ன காவலர் ரேவதிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
 
#MaiamTalks நிகழ்வில் டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் அவர்கள், தொற்றின் தீவிரத்தைப் பற்றியும், மக்கள் ஒத்துழைப்பின் அவசியத்தைப் பற்றியும் விளக்கியது கண்டேன். பயனுள்ள, நாம் காண வேண்டிய காணொளி
youtu.be/PgX5IAg1Zp0
 
சாத்தான்குளம் வழக்கை CBI-க்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே!

குற்றவாளிகள் மேல் IPC 302 கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை புலனாய்வுத் துறையிடம் ஒப்படையுங்கள்.

(1/2)
Replying to @ikamalhaasan
CBI விசாரணைக்காக மாற்றப்பட்டு, கிடப்பில் இருக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குட்கா ஊழல் போன்ற வழக்குகளின் வரிசையில் இதையும் சேர்த்து, மக்கள் மறந்து விடுவார்கள் என காத்திராமல், நீதியைக் காத்திடுங்கள். காலம் தாழ்த்தப்பட்ட நீதி, அநீதி. (2/2)
 
சாத்தான்குளம் வழக்கை CBI-க்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே!

குற்றவாளிகள் மேல் IPC 302 கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை புலனாய்வுத் துறையிடம் ஒப்படையுங்கள்.

(1/2)
 
கண்ணதாசனைப் பற்றி பேசும்பொழுதெல்லாம்
திரு. MSV அவர்களின் குரலும் எதிரொலிக்கும்.....

இருவரும் அழியாப் புகழைப் பெற்றவர்கள்.
மெல்லிசை மன்னர் M.S.விஸ்வநாதன் அவர்களுக்கு திரு. @ikamalhaasan அவர்களின் பிறந்த நாள் வாழ்த்து! pic.twitter.com/8aFaBNUWcA
 
அய்யன் கண்ணதாசருக்கு
என்
ஆழ்ந்த அன்பின்
ஒரு துளி.

இன்று
உமக்குப் பிறந்த நாளாம்.

நேற்றும், இன்றும், நாளையும் அதுவாகவே கடவது.

இத்தகை வித்தகர்
அடிக்கடி கிட்டார்!

(1/2)
Replying to @ikamalhaasan
கிட்டா அடிகளை கடைமடை சேர்க்கும் இவ்வற்புத நதிக்கு ஏது பிறந்த நாள்? இன்றும், என்றும் ஓடும் நதி நீர். என் அடுத்த வரியின் அழியா உயிர் நீர். (2/2)
 
அய்யன் கண்ணதாசருக்கு
என்
ஆழ்ந்த அன்பின்
ஒரு துளி.

இன்று
உமக்குப் பிறந்த நாளாம்.

நேற்றும், இன்றும், நாளையும் அதுவாகவே கடவது.

இத்தகை வித்தகர்
அடிக்கடி கிட்டார்!

(1/2)
கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு திரு @ikamalhaasan அவர்களின் பிறந்தநாள் கவிதை! pic.twitter.com/LVeLUbMGKb
 
உயிரிழப்புகளைத் தடுக்க ஊரடங்கு, அதன் விதிகளை மீறியதற்காக காவல் துறையின் நடவடிக்கையில் இருவர் மரணம். மனித உரிமை மீறல், அதிகார துஷ்பிரயோகம், மன அழுத்தம் என காவல் துறையின் சட்டமீறல்கள் பல உள்ளன. சட்டத்தின் காவலர்கள் சட்டம் மீறுதல் மன்னிக்கக் கூடாத குற்றம்.
 
In reply to @ikamalhaasan
அன்றாடம் அவன் அர்ப்பணிக்கும் அர்ச்சனையும், இவன் மல்கித் திளைக்கும் அத்தெய்வமும் நிஜமென்றால்... தினம் கர்ப்பக்கிரகம் விட்டிறங்கி, இவன் அருகிலமர்ந்து தோள் சாய்ந்து காதலிக்கும் அது! (3/4)
Replying to @ikamalhaasan
இது போலத் தனித் தபசில் மகரிஷிகள், தெய்வங்களைத் தேடியலைகையில், நம் கண்ணில் பட்டும் படாது கேட்டும் கேளாது எத்தனை மட்டுப் பட்டுப் போனது நம் கலைகள்! விலாசமின்றி வீசும் வியாபாரக் காற்றில் கலைந்தும் மாய்ந்தும் போகிறார்கள் மகாகவிகள். (4/4)
 
In reply to @ikamalhaasan
இவன் ஆழ்மனக் கவலைகளை விசாரித்தறிவார் இல்லாததால், தன் இசைக்கருவியை தன் சோகத்தின், பக்தியின், விரக்தியின் கழிப்பிடமாக கருதுகிறான். அவன் தன் ஆலயமும் அதுவே!!! (2/4)
Replying to @ikamalhaasan
அன்றாடம் அவன் அர்ப்பணிக்கும் அர்ச்சனையும், இவன் மல்கித் திளைக்கும் அத்தெய்வமும் நிஜமென்றால்... தினம் கர்ப்பக்கிரகம் விட்டிறங்கி, இவன் அருகிலமர்ந்து தோள் சாய்ந்து காதலிக்கும் அது! (3/4)
 
youtu.be/qcHRAc7yprU

தனித்ததோர் ஆலயம்!
ஆட்கூட்டம் அதிகமில்லாத
ஒரு தலம்.
ஒரு
தனிக் கலைஞன்,
தன் இசையை
வணிக நோக்கு எதுவுமின்றி,
தன் அய்யனை
இசையால்
குளிப்பாட்டிக் கொண்டிருக்கின்றான்.
(1/4)
Replying to @ikamalhaasan
இவன் ஆழ்மனக் கவலைகளை விசாரித்தறிவார் இல்லாததால், தன் இசைக்கருவியை தன் சோகத்தின், பக்தியின், விரக்தியின் கழிப்பிடமாக கருதுகிறான். அவன் தன் ஆலயமும் அதுவே!!! (2/4)
 
youtu.be/qcHRAc7yprU

தனித்ததோர் ஆலயம்!
ஆட்கூட்டம் அதிகமில்லாத
ஒரு தலம்.
ஒரு
தனிக் கலைஞன்,
தன் இசையை
வணிக நோக்கு எதுவுமின்றி,
தன் அய்யனை
இசையால்
குளிப்பாட்டிக் கொண்டிருக்கின்றான்.
(1/4)
 
ஆணவக் கொலைகள் நம் சமுதாயத்தில் புரையோடியிருக்கும் நச்சுகளின் அடையாளம். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது அரசின் கடமை. தமிழகத்தையே உலுக்கிய கொலையில் A1 குற்றவாளி மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க முடியவில்லை என்பது யார் தவறு?
 
நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை!
Annaathe Adurar on treadmill... Thot of posting it later but couldn't resist to show my fellow kamalians❤️ theres more stock... So heres the first one. #Annaatheadurar #aboorvasagotharargal @ikamalhaasan #kamalhaasan #treadmilldance @cinemapayyan pic.twitter.com/0wFOCNaz2i
 
எல்லையில் சீன வீரர்களுடனான மோதலில் உயிரிழந்த இராமநாதபுரத்தைச் சேர்ந்த இந்திய வீரர் பழனி அவர்களின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் தலைவணங்குகிறோம். அவர் குடும்பத்திற்கு நம் அன்பும், ஆழ்ந்த அனுதாபங்களும். உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள். அமைதி வழி தீர்வு காண்போம்.
 
கடந்த 40 ஆண்டுகளில் நம் நற்பணி அணியினர் 4 இலட்சம் யூனிட் இரத்த தானம் செய்துள்ளனர். 4 இலட்சம் உயிர்களைக் காக்கும் முயற்சி அது. உங்கள் உதவி, உயிர் காப்பதை கண்முன் காண்பீர்கள். உலக இரத்த தான தினமான இன்று, இரத்த தானத்தின் தேவையை எடுத்துரைப்போம்; நம் தானம் தொடர்வோம்.
உயிர் காப்போம்.
 
In reply to @ikamalhaasan
உள்ளே இருக்கும் உயிரூட்டங்கள் அனைவருக்குமே பொருந்தும், எனவே கொள்ளைநோய் நமைக் கொல்லும்போதும் மானுடம் மீண்டிடும் மந்திரம் சொல்வோம். நானெனும் அகந்தை மறந்த மனிதர் நிதமும் பேசும் உண்மைச் சொல் அது. மாயமும் இல்லை! மந்திரமில்லை!! நம்மை மிஞ்சும் ஈகையும் அன்பும்!!!
Replying to @ikamalhaasan
தாயிடம் கற்றது போதாதென்றால் வாழ்விடம் கற்பீர், வேறேது வழி? வீரவணக்கம் என்றிடும் கோஷம், வீழ்ந்தவருக்கு மட்டும் அன்று.... நாளை என்றொரு நாளை நோக்கி நடக்கும் நம்மவர் அனைவருக்குமே.... நாளை நமதே
 
In reply to @ikamalhaasan
காலை என்றொரு பொழுதில்லாமல் காலம் உலகில் கழிந்தது இல்லை... நாளை என்ற கனவில்லாமல் இரவுகள் என்றும் கடந்தது இல்லை... வேலை என்று ஏற்பது அல்ல, வீடும்,சுற்றமும்,நாடும் எல்லாம்.. தோலை உரித்து ஆராய்ந்திடினும் வண்ணம் என்பது ஒளி மாயை தான்.
Replying to @ikamalhaasan
உள்ளே இருக்கும் உயிரூட்டங்கள் அனைவருக்குமே பொருந்தும், எனவே கொள்ளைநோய் நமைக் கொல்லும்போதும் மானுடம் மீண்டிடும் மந்திரம் சொல்வோம். நானெனும் அகந்தை மறந்த மனிதர் நிதமும் பேசும் உண்மைச் சொல் அது. மாயமும் இல்லை! மந்திரமில்லை!! நம்மை மிஞ்சும் ஈகையும் அன்பும்!!!
 
வீரவணக்கம்!

வீரவணக்கம் வீரவணக்கம்
வீழும் இவ்வுடல் என்று உணர்ந்து
விழைந்து ஈகை
செய்தவருக்கு
வீரவணக்கம்! வீரவணக்கம்!

கொள்ளை நோய்
நமைக்
கொன்று குவிக்கும்
வேளையிலும்
சக மானுட சேவை
கடமை
என்ற
முன் அணிகட்கு
வீரவணக்கம்!
நம்மவருக்கு வீரவணக்கம்!! pic.twitter.com/a03mN8P9Ux
Replying to @ikamalhaasan
காலை என்றொரு பொழுதில்லாமல் காலம் உலகில் கழிந்தது இல்லை... நாளை என்ற கனவில்லாமல் இரவுகள் என்றும் கடந்தது இல்லை... வேலை என்று ஏற்பது அல்ல, வீடும்,சுற்றமும்,நாடும் எல்லாம்.. தோலை உரித்து ஆராய்ந்திடினும் வண்ணம் என்பது ஒளி மாயை தான்.
 
வீரவணக்கம்!

வீரவணக்கம் வீரவணக்கம்
வீழும் இவ்வுடல் என்று உணர்ந்து
விழைந்து ஈகை
செய்தவருக்கு
வீரவணக்கம்! வீரவணக்கம்!

கொள்ளை நோய்
நமைக்
கொன்று குவிக்கும்
வேளையிலும்
சக மானுட சேவை
கடமை
என்ற
முன் அணிகட்கு
வீரவணக்கம்!
நம்மவருக்கு வீரவணக்கம்!!
 
 
வெள்ளம் புயல் என எது வந்தாலும் எப்போதும் தன்னார்வமாய் முன்னால் நிற்பது நீங்கள்தான்.

தன்னார்வத்தொண்டு நிறுவன நண்பர்களே
கொரோனாவை ஒழிப்பதற்கும் உங்கள் பங்களிப்பு இப்பொழுது தான் அதிகம் தேவை.
நாமே தீர்வாக மாறுவோம்.
#நாமேதீர்வு
#NaameTheervu
இணைந்து மீட்போம் சென்னையை.
Call 6369811111
 
பெண்களுக்கான உதவிகள், பெண்களுக்கான ஆலோசனைகள் அதை பெண்கள்தான் செய்ய முடியும்.

பெண்களே, நீங்கள் நினைத்தால் முடியாதது ஒன்றுமே இல்லை.

நாமே தீர்வாக மாறுவோம்.

#நாமேதீர்வு
#NaameTheervu
இணைந்து மீட்போம் சென்னையை...

Call 6369811111
 
Mr @arrahman and I are coming together on an Instagram chat on the 12th June at 5pm to converse on music, movies and all things that matter to us !

@RKFI @turmericmediaTM @deepak30000 @Banijayasia @OpenPannaa #ThalaivanIrukkindraan
 
தெய்வம் நின்று கொல்லும்...
பயம் இன்றே கொல்லும்!

கொரோனா வந்தால் இறப்புதான் என்று பயந்தே செத்து கொண்டிருப்பவர்கள் அதிகம்.

மருத்துவர்களே!சிறிது நேரம் ஒதுக்கினால்,பலர் பயமின்றி வாழ உதவலாம்!
நாமே தீர்வாக மாறுவோம்.
#நாமேதீர்வு
#NaameTheervu
இணைந்து மீட்போம் சென்னையை..
Call 6369811111
 
எந்த பதவியும் நாடாமல், நற்பணிக்காக நம்முடன் இணைந்த தோழர் திரு.திலக் அவர்கள் நம் அடையாளம்.
நம் மய்யத்தின் அடிநாதம். கொரோனா கொள்ளை நோய் தாக்கி உயிரிழந்த நம் உறவின் உறவுகளுக்கு நம் அன்பும், அனுதாபங்களும்.
நற்சேவை நாயகா...நன்றி.
 
கொரோனாவால் உயிரிழந்தவர்களை விட, பொருளாதார வீழ்ச்சியால் வாழ்வாதாரம் இழந்தவர்கள் அதிகம்.

தொழில் முனைவோர் மற்றும் தொழில் அதிபர்களே... வாருங்கள், பல வீடுகளுக்கு நம்பிக்கை வெளிச்சமாக அமைவோம்!
#நாமேதீர்வு
#NaameTheervu
இணைந்து மீட்போம் சென்னையை...
Call 6369811111
 
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட, அலட்சியத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம்.

இளைஞர்களே!
நாம் இணைந்து உழைத்தால், பல குடும்பங்கள் அச்சமின்றி வாழ உதவலாம்!
நாமே தீர்வாக மாறுவோம்.

#நாமேதீர்வு
#NaameTheervu
இணைந்து மீட்போம் சென்னையை...
Call 6369811111
 
On this International Cancer Survivors Day, I wish all the survivors of cancer and their families more strength and courage. You people are living examples that this can be fought and won. Thank you for being a source of hope and strength for people fighting against Cancer.
 
என்னைப்போல பலரின் கனவுகளை நனவாக்கிய சென்னையை மீட்டெடுக்கும் ஒரு முயற்சி இது.

தீர்வுகளை தேடும் தன்னார்வலராக பதிவு செய்திட
63 - 69- 81- 11- 11 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
#நாமேதீர்வு #NaameTheervu
 
பகுத்தறிவை எழுத்தில் பேசி, செந்தமிழில் பெயர் சூட்டல் தொடங்கி, பேருந்தில் திருக்குறள் வரை தமிழ் ஊட்டிய அரசியல் அறிஞர் கலைஞர் அவர்களை இந்நாளில் நினைவு கூர்கிறேன். சமூக நீதியையும் வளர்ச்சியையும் தன்னால் இயன்றவரை சாத்தியமாக்கிய அரசியல் ஆளுமை அவர்.
 
 
#நாமேதீர்வு
#NaameTheervu
 
Sad to learn the demise of M.D of Mathrubhumi, M.P Veerendra Kumar, Who donned many hats as a former union minister, an Author and a Socialist, but always a very good human being. My condolences to the family and people close to him.
 
சக மனிதன் மீதான அன்பும், அடுத்தவருக்கு செய்யும் உதவியும் தான் இன்றைய நம் உலகின் இயங்கு சக்தி. இந்த ஈகைத் திருநாளில், உதவும் உள்ளங்களின் அன்பு அனைவருக்கும் கிடைத்து, மகிழ்வுடன் கூடி வாழும் ஒரு நாடாவோம். இந்தியர் என இணைவோம்.
அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்.
 
Then, he created a storm by talking with a bloodstained shirt. Now, he has made his state the object of adulation in the country. The CM of Kerala emphasised our bond, calling us brothers, keeping the borders open. Our Heartfelt birthday wishes to our comrade @vijayanpinarayi
 
மக்களின் குரலுக்கு செவி சாய்க்காமல், போர் குற்றவாளிகளைப் போல் சொந்த அரசே எம் மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற தினம் இன்று. சுவாசிக்க நல்ல காற்றைக் கேட்டவர்களின் மூச்சையே பறித்து, முதலாளியின் வருமானத்தை காக்க, அரசு தன் மானத்தை அடகு வைத்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிறது.
 
Dear Mr.@Mohanlal I liked you from your first film. I envied you for the constant quality of your work, that too with detractors lurking in every turn. I liked you even more when I worked with you. Long live my younger brother.
 
20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு?

மாநிலத்திற்கு நியாயமாக வர வேண்டியதைக் கேட்டால் எங்கே எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம்.

ஆகவே டாஸ்மாக்கில் மக்கள் உயிரைப் பணயம் வைத்து பணம் பறிக்கிறது அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு.
 
தொற்று அதிகம் இருந்த ஈரோடு மாவட்டத்தை தொற்றில்லாது மாற்றி இருக்கும் ஆட்சியர் கதிரவனுக்கும், S.P. சக்திகணேசனுக்கும், மருத்துவ,தூய்மை பணியாளர்களுக்கும், காவலர்களுக்கும் என் பாராட்டுக்கள். தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் செய்ததை மாநிலம் முழுதும் செய்ய வேண்டாமா?அரசு முனைந்தால் முடியும்.
 
மதுக்கடைகளை மூடியதற்கு தமிழகமெங்குமுள்ள தாய்க்குலம் வாழ்த்துச் சொன்னது.
திறந்ததற்கான தீர்ப்பை அதே தாய்க்குலம் சொல்லும், மிக விரைவில்.
அப்போது நீங்கள் அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டுத் தப்பிக்க முடியாது.
 
உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று இழுத்தடித்து, உச்ச நீதிமன்றத்தில் இடைகாலத்தடை வாங்கி விட்டது தமிழக அரசு. மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை, மதுக்கடை திறப்பில் காட்டும் இந்த அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது.
 
Yashoda, a short film by @sripriya together with @nasser_kameela and @shivakumarr222 is shot on mobile. Edited by Reuben with BGM by Krish and sung by Nritya Pillai, it is an interesting attempt. I am happy to release the first look of "Yashodha" and look forward to seeing it.
 
முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது.
கொரோனா பாதிப்பில் 8ம் இடத்திலிருந்து 2ம் இடத்தை எட்டிப் பிடித்து விட்டது.
காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு, மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறது அரசு. #தாங்குமாதமிழகம்
 
 
Register for Trendsmap Access
Login via Twitter to start your free trial now

Don't have a Twitter account? You can also register via Facebook

* Analytics, alert and visualisation tools require additional authorisation
Existing users can login

Our trial allows access to only the 8 hour timeframe for this page.

A Trendsmap Plus subscription provides full access to all available timeframes

Signup Now